சவுதியில் பிறை தென்படவில்லை ரமலான் முதல் தேதியை அறிவித்த சவூதி அரசு முழு விபரம் The crescent moon has NOT been sighted in Saudi Arabia
சவூதி அரேபியாவில் இன்று மார்ச் 21 செவ்வாய்க்கிழமை ரமலான் மாத பிறை காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை ஷபான் மாதத்தின் கடைசி நாள் என்றும் மார்ச் 23 ம் தேதி (வியாழன்) ரமலான் மாதத்தின் முதல் நாளாக இருக்கும் என்றும் சவூதி அரேபியாவின் பிறை பார்க்கும் கமிட்டி தெரிவித்துள்ளது.
பொதுவாக இஸ்லாமிய மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதம் ரமலான் மாதம் ஆகும்.
சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், 21 மார்ச் 2023, 29 ஷாபான் 1444 க்கு புனித ரமலான் மாதத்தின் பிறையை விசாரிக்க குடியிருப்பாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தது
சவூதி அரேபியாவில் பிறை நிலவு காணப்படவில்லை என்பதால் ரமலான் புதன்கிழமை இரவு தொடங்கும், இன்ஷா அல்லாஹ்.வியாழன் அன்று நோன்பின் முதல் நாள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: மார்க்க செய்தி