Breaking News

மாநகர பேருந்துகள் தனியார் மயமா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

அட்மின் மீடியா
0

சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி கொடுக்க மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது. அதன்படி, Gross Cost Contract ஒப்பந்த முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளையும், 2025ம் ஆண்டு 500 பேருந்துகளையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது

 


மேலும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள், இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்இந்த நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் செய்தியாளர்களிடம்:-

சென்னை மாநகராட்சி தனியார் பேருந்து இயக்கம் தொடர்பான சாதக, பாதகங்கள் ஆய்வு செய்யப்படும். சாதக, பாதகங்கள் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து ஆலோசனை நடத்தி 3 மாதத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்.

தனியார் பேருந்துகளால், அரசின் எந்தவொரு திட்டங்களும் பாதிக்கப்படாது.தனியார் பேருந்துகளை இயக்க அதிமுக ஆட்சியில் உலக வங்கி பரிந்துரைத்தது. தனியார் பேருந்துகளை இயக்கலாமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள ஆலோசகரை தேர்வு செய்யவே டெண்டர். தனியாரிடம் பேருந்து வாங்கி அரசுத் தடத்தில் இயக்கவே திட்டமிடப்பட்டுள்ளது”

நடைமுறையில் இருக்கும் அரசு பேருந்துகள் சேவை நிறுத்தப்பட மாட்டாது.மாணவர்கள், மகளிர், முதியோர்களுக்கான பேருந்து சலுகைகள் நிறுத்தப்படாது. மாணவர்கள், மகளிர், முதியோர்களுக்கான பேருந்து சலுகைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். 

நாளையே தனியார் பேருந்துகள் இயக்கம் என்ற பதற்றத்தை ஏற்படுத்துவது தேவையில்லாத செயல். போக்குரத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback