Breaking News

அரசு விரைவு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு 50% கட்டண சலுகை போக்குவரத்து அமைச்சர் அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணிக்கும் பயணிகளுக்கு 50% சலுகை வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் மாதம் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்தால் கட்டணச் சலுகை 6 ஆவது முறை முன்பதிவு செய்து பயணம் செய்யும் போது 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும் - போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்

தமிழக சட்டப்பேரவையில் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் SETC பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு, 6-வது முறை பயணம் முதல், 50% கட்டணச் சலுகை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சலுகை அனைத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் பொருந்தும்  என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback