Breaking News

சிறுத்தைக்கு வைத்த கூண்டில் சிக்கிய இளைஞர்! A young man trapped in a leopard cage

அட்மின் மீடியா
0

உத்தரப் பிரதேசத்தில் சிறுத்தைக்கு வைக்கப்பட்ட கூண்டில் இளைஞர் ஒருவர் சிக்கியிருந்த விடியோ வைரல் ஆகி வருகின்றது

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சஹார் மாவட்டத்திலுள்ள பாசேந்துவா கிராமத்தில் அடிக்கடி சிறுத்தையால் பொதுமக்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வனத் துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த கூண்டில் சேவல் ஒன்று இரையாக வைக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் கூண்டில் வைக்கப்பட்டு இருந்த சேவலை எடுக்க இளைஞர் ஒருவர் முற்பட்டார். இதனால் சிறுத்தைக்காக வைக்கப்பட்டிருந்த கூண்டில் அவர் சிக்கினார். அதனை தொடர்ந்து இளைஞரின் சத்தம் கேட்டு வந்த வனத்துறை கூண்டிலிருந்த நபரிடம் விசாரிக்கும்போது சிறுத்தைக்கு இரையாக வைக்கப்பட்டிருந்த சேவலை எடுக்க வந்தது தெரியவந்தது. இதுகுறித்த வீடியோவை அம்மாநில வனத் துறை வெளியிட்டுள்ளது.

வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=0lpslPDBtKM&t=1s

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback