Breaking News

துருக்கியில் 7.8 அளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்க வீடியோ Powerful earthquake of magnitude 7.8 strikes Turkey

அட்மின் மீடியா
0

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தில் துருக்கி - சிரியா எல்லை அருகே இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.


அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. 

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. அதேவேளை, இந்த பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

நிலநடுக்கத்தால் பெரிய கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியதை அடுத்து அதிகாலை வேளையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.

தென்கிழக்கு துருக்கியின் காலியென்டெப் பகுதியில் கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன, இதனால் மக்கள் எல்லாரும் கட்டடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் இறங்கியுள்ளனர்

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பலி எண்ணிக்கை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் லெபனான், ஜோர்டான், பிரிட்டன், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது. 

மேலும் துருக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்பட அண்டை நாடுகளில் உணரப்பட்டுள்ளது.


நிலநடுக்க வீடியோ பார்க்க:-

https://twitter.com/ChaudharyParvez/status/1622412486644494336

https://twitter.com/Joyce_Karam/status/1622416291872051205

https://twitter.com/ChaudharyParvez/status/1622424163842674688

https://twitter.com/ChaudharyParvez/status/1622424490239209474


7.8 earthquake reported in Central Turkey

Magnitude 7.8 earthquake hits Turkey

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback