Breaking News

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு இமெயில் ஐடி கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை!! Email ID is mandatory for class 12

அட்மின் மீடியா
0

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இமெயில் ஐடி கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் உயர்கல்வி சேர்க்கை, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு மின்னஞ்சல் எனப்படும் எனப்படும் மெயில் ஐடி தேவைப்படுவதால் அனைத்து மாணவர்களும் இ-மெயில் ஐடியை உருவாக்கும் பணிகளை வரும் 9 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும் இதன் மூலம் மாணவர்களுக்கு கல்லூரிகள் மின்னஞ்சல் வாயிலாகவே தகவல்கள் அனுப்ப முடியும் என கூறப்படுகிறது.


இமெயில்  ஐடி உருவாக்குவது எப்படி:-

முதலில் உங்கள் பிரவுசரில் ஜிமெயில் gmail.com என்ற இணையதளத்திற்கு செல்லவும். 

அடுத்து அதில் Create an account என்ற பட்டனை அழுத்தவும்.

அதில் உங்களின் பெயர், user name என்ற இடத்தில் உங்களின் ஜிமெயில் அக்கவுண்டிற்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறீர்களோ அந்தப் பெயரை குறிப்பிடவும்.

அடுத்து கீழ் உள்ள நெக்ஸ்ட் என்ற பட்டனை அழுத்தவும்

அதன் பின்பு உங்களின் மொபைல் எண் மற்றும் நீங்கள் பிறந்த தேதியை குறிப்பிடவும் அதன் பின்பு நீங்கள் ஆணா பெண்ணா என்பதை குறிப்பிடவும்

அதன் பின்பு I agree என்ற பட்டன் தோன்றும் அந்த பட்டனை அழுத்தவும்.

அவ்வளவுதான் உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட் உருவாகிவிட்டது 

how to create a gmail account

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback