வாட்ஸப் புது அப்டேட் தவறுதலாக Delete for everyone க்கு பதிலா Delete for me கொடுத்துட்டா பயப்படவேண்டாம் முழு விவரம்
வாட்ஸ்அப் குரூப்பிலோ அல்லது தனிப்பட்ட நபருக்கோ நாம் அனுப்பிய மெசஜில் சில நேரம் தவறு நடக்கலாம் அப்போது நாம் அந்த மெசஜை Delete for Everyone கொடுத்தால் அந்த மெசஜை அவர்கள் பார்க்கமுடியாது
ஆனால் சில சமயங்களில் 'Delete for Everyone' கொடுப்பதற்கு பதிலாக கைதவறுதலாக 'delete for me' கொடுத்துவிடுவோம் ஆனா அந்த மெசேஜை உங்களால் மட்டும்தான் பார்க்க முடியாது. ஆனால், அந்த மெசேஜை யாருக்கு அனுப்பினோமா அவர்கள் தாராளமாக பார்க்க முடியும்.
அந்த தவறை வாட்ஸப் நிறுவனத்திற்க்கு பலரும் சுட்டிகாட்டியதை அடுத்து அதற்க்கான அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளது
அதன்படி 'delete for me' கொடுத்து அழிக்கப்பட்ட மெசேஜை Undo கொடுத்து திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். அதனை ரெக்கவர் செய்தபின் 'Delete for Everyone' கொடுக்க விரும்பினால் கொடுத்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.உடனே வாங்க வாட்ஸப்பை அப்டேட் செய்து முயற்ச்சி செய்து பாருங்கள்
டெலீட் ஃபார் எவ்ரி ஒன்” என்பதற்கு பதிலாக “டெலீட் ஃபார் மீ” என்று தவறுதலாக கிளிக் செய்துவிட்டால் அதனை திருத்திக்கொள்ள Undo ஆப்ஷன் 5வினாடிகள் வரை வாட்ஸ்அப், பயனர்களுக்கு அனுமதிக்கிறது. இந்த புதிய அப்டேட் மூலம் பயனர்கள் அழித்த மெசேஜ் மீண்டும் சாட் பகுதியில் வந்துவிடும்
Tags: தொழில்நுட்பம்