இந்தோனேசியாவில் செமேரு எரிமலை வெடித்து சிதறும் வீடியோ Mount Semeru
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள லுமாஜாங் நகரில் சுமார் 12,060 அடி உயரம் கொண்ட செமேரு எரிமலை நேற்று அதிகாலை திடீரென வெடித்து சிதறியது.
இந்த எரிமலை வெடிப்பினால் இதுவரை யாரும் பாதிக்கப் படவில்லை என்ற போதும் எரிமலைக்கு அருகே குறைந்த பட்சம் 8 Km இற்கு அப்பால் வரை பொது மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
எரிமலையில் இருந்து 8 கி.மீ தூரம் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அந்த நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
செமெரு எரிமலை தற்போது ஜாவா குழம்பை கக்கி வருகின்றது. மேலும் எரிமலை சாம்பல் தற்போது பெய்து வரும் பருவ மழையுடன் கலந்து மாசினை ஏற்படுத்தி வருவதால் பொது மக்களது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
பசுபிக் சமுத்திரத்தின் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்திருக்கும் செமெரு எரிமலை ஜாவாத் தீவில் அமைந்துள்ள மிகப்பெரிய ஆக்டிவ் எரிமலை ஆகும்.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/US_Stormwatch/status/1599523597068144640
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ