ஆதார் இணைத்தால் 100 யூனிட் மானியம் ரத்து என்பது வதந்தி - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் TNEB WITH AADHAR
சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மின் வாரிய அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள்:-
எல்லா இடங்களிலும் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு எந்த பாதிப்பும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது என்று கூறிய அவர் மேலும் 100 நாட்களில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்றும், இந்த திட்டம் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 20,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது மீதமுள்ள விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில்
மழையால் பாதிப்பு ஏற்பட்டால் உடனுக்குடன் மின்னகத்தை தொடர்பு கொண்டு எந்த
இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் புகார் தெரிவிக்க
வேண்டும். புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
மேலும் மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட 100 யூனிட் மானிய மின்சாரம் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானிய மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
tneb online payment #tneb online #tneb login #tneb reading #tangedco login #tneb bill payment #tneb reading details #tneb online payment login #tneb online bill payment #tangedco online payment #tneb bill payment online #eb bill online #tneb bill #tneb bill status #tneb quick pay #tneb online login #eb bill status #reading details #tneb online payment consumer number #eb reading details.
Tags: தமிழக செய்திகள்