பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10% சதவீத இடதுக்கீடு செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு economically weaker section
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10% சதவீத இடதுக்கீடு செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
முன்னேறிய வகுப்பினர் அல்லது உயர்ஜாதி ஏழைகள் என்ற அடிப்படையில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.இதற்காக அரசியலமைப்பு சாசனத்தின் 103-வது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் வகையில் 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டு நடைமுறையில் உள்ளது
இதற்கிடையே முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யூயூ லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரவீந்திர பட், திரிவேதி, பரித்வாலா அமர்வு விசாரணை நடத்தி வந்தது அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.இந்நிலையில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது
அதில் மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10% சதவீத இடதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
10% இட ஒதுக்கீடு செல்லும் என 4 நீதிபதிகள் தீர்ப்பளித்த நிலையில், ஒரு நீதிபதி மட்டும் எதிராக தீர்ப்பளித்துள்ளார். அதாவது, 10 சதவீதம் இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என 5 நீதிபதிகள் அமர்வில் ஒரு நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
ews certificate,ews full form,full form of ews,economic weaker section,ews category,ews meaning,ews means,ews form,ews criteria,ews full form in hindi,ews reservation,ews certificate eligibility,ews certificate documents,ews certificate full form,what is ews category,documents required for ews certificate,economically weaker section certificate download,ews application form,ews certificate online,how to apply for ews certificate.
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்