வாட்ஸ்அப்பில் குருப் லின்ங் போல் வீடியோ கால் லிங்க் வசதி.. அப்டேட் முழு விவரம் whatsapp video calling
அட்மின் மீடியா
0
வாட்ஸ்அப்பில்
‘கால் லிங்க்ஸ் உருவாக்கி அதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து ஆடியோ அல்லது
வீடியோ கால் பேசலாம். அதேபோல் வீடியோ காலில் அதிகபட்சமாக 32 நபர்களுடன்
பேசும் வகையில் புது அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் அடிக்கடி தன் பயனர்களுக்கு புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.அந்தவகையில் தற்போது ‘கால் லிங்க்ஸ்’ (Call Links) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது
அதாவது
Zoom கால் , கூகுள் மீட் போல் வாட்ஸ்அப்பிலும் இனி லிங்க் உருவாக்கி அதை
மற்றவர்களுக்கு ஷேர் செய்யலாம். தற்போது இந்த வசதி
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நீங்கள் உங்கள் வாட்ஸப் கால் பகுதிக்கு
சென்று பார்க்கலாம், அல்லது இந்த வசதியை பெற உடனே உங்கள் வாட்ஸப்பை ப்ளே
ஸ்டோருக்கு சென்று அப்டேட் செய்யுங்கள்
தற்போது
வாட்ஸ்அப் வீடியோ காலில் 8 நபர்களுடன் மட்டுமே பேச முடியும் ஆனால் இனி 32
பேருடன் பேசும் வகையில் அப்டேட் செய்யப்பட உள்ளது இந்த வசதி தற்போது சோதனை
செய்யப்பட்டு வருகிறது. மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: தொழில்நுட்பம்