Breaking News

குஜராத்தில் பாரம் தாங்காமல் விழும் தொங்குபாலம் கடைசி சிசிடிவி வீடியோ காட்சி! gujarat bridge collapse cctv

அட்மின் மீடியா
0

 குஜராத்தில் பாரம் தாங்காமல் விழும் தொங்குபாலம் கடைசி சிசிடிவி வீடியோ காட்சி!


குஜராத் மோர்பி நகரில் நேற்று நடந்த கேபிள் பால விபத்தில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு! 100க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை தேடும் பணிதொடர்ந்து நடந்து வருகின்றது

குஜராத்தின் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டபட்ட தொங்கு பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது ஆகும் மேலும் அந்த பாலம் கடந்த 7 மாதங்களாக சீரமைப்பு பணி நடந்து வந்த நிலையில் மக்கள் செல்வதற்க்காக தீபாவளியையொட்டி குஜராத் புத்தாண்டு தினமான கடந்த 26-ஆம் தேதி இந்த பாலம் திறக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுகிழமை  விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது மாலை சுமார் 6.30 மணியளவில் கேபிள் பாலத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இருக்கும் போது திடீரென்று பாரம் தாங்காமல் கேபிள் பாலம் அறுந்து விழுந்தது. இதில் கேபிள் பாலத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக வந்த மக்கள் மற்றும் போலீசார் தீயனைப்பு வீரர்கள் என அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் சுமார்132 பேர் உயிரிழந்துள்ளார்கள், மேலும் 100 பேர் வரை இன்னும் பால இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.மாநில பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பாலம் அறுந்து விழும் எடுக்கபட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது அதில் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது இளைஞர்கள் சிலர் வேண்டும் என்றே பாலத்தை பிடித்து இழுத்து அசைத்தனர். இன்னும் சிலர் குதித்து விளையாடினார்கள் இதனால், பாலம் ஆடிகொண்டும் இருக்கும் வீடியோ வெளியானது 

இந்த நிலையில், பாலம் இடிந்து விழும்போது பதிவான சிசிடிவி காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில், பாலத்தில் நிற்கும் மக்கள் போன் உபயோகித்து கொண்டு மற்றும் தங்களுடைய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென பாலம் இடிந்து விழுகிறது. இந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது


வீடியோ பார்க்க:-

https://twitter.com/Hereprak/status/1586959646501502976


https://twitter.com/ysathishreddy/status/1586962926367559680

gujarat bridge collapse

கேபிள் பாலம்

குஜராத்

Machchhu River

Cable bridge on Machchhu river collapsed

machchhu river cable bridge

machhu river

गुजरात के मोरबी में बड़ा हादसा, केबल पुल टूटने से कई लोग नदी में गिरे, अब तक 60 लोगों की मौत


Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback