Breaking News

மின் கட்டணம் கட்டவில்லை என போலியாக வரும் மெசஜ்களுக்கு பதில் அளிக்காதீர்கள் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை வீடியோ fake electricity bill message

அட்மின் மீடியா
0

 நீங்கள் மின் கட்டணம் கட்டவில்லை எனவே உங்கள் மின்  இணைப்பு துண்டிக்கப்படும் என யாராவது மெசேஜ் அனுப்பினால் அதற்கு பதில் தராதீர் என தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்

                                             

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் வெளியிட்ட வீடியோவில் 

பல்வேறு விதமான மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுத்து வருகிறோம். சமீபத்தில் புதிதாக ஒரு மோசடி வந்துள்ளது.இதுதான் எல்க்ட்ரிசிட்டி மோசடி அதாவது மின் கட்டண மோசடி. 

உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும். அதில் " வாடிக்கையாளரே, இது மின்சார வாரியத்தில் இருந்து வந்த மெசேஜ். நீங்கள் மின் கட்டணத்தை செலுத்தாததால் உங்கள் மின் இணைப்பு இன்று இரவு 10.30 மணிக்கு துண்டிக்கப்படும்.எனவே உடனடியாக மின்சார வாரியத்தையோ அதிகாரியையோ அணுகுங்கள்" என ஒரு மெசேஜ் வரும். அதில் ஒரு போன் நம்பர் கொடுக்கப்படும். அந்த எண்ணிற்கு நீங்கள் போன் செய்தால் , மறுமுனையில் பேசும் நபரிடம் நீங்கள் உங்கள் மின் கட்டணத்தை செலுத்தி விட்டீர்கள் என கூறினால், அதன் ஸ்கிரீன்ஷாட்டை அனுப்புங்கள் என சொல்வார்கள்.



ஒரு வேளை டவுன்லோடு செய்தால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து சிறுக சிறுக அந்த நபர்களுக்கு பணம் சென்று கொண்டே இருக்கும். உங்கள் போனுக்கு வரும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் கடவுச் சொல்லையும் (ஓடிபி) அவர்களால் பார்க்க முடியும். இது மிகவும் ஆபத்தான மோசடி.

எனவே இது போன்று வரும் மெசேஜ்களுக்கு பதில் அளிக்காமல் இருப்பதே நல்லது. இது போல் யாராவது மெசேஜ் அனுப்பினால் காவல் துறைக்கு தகவல் அளியுங்கள். 100, 112 உள்ளிட்ட எண்களுக்கு தகவல் கொடுங்கள். இல்லாவிட்டால் காவல் உதவி செயலிக்கு தகவலை மட்டும் கொடுங்கள். இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பிடித்துவிடுவோம்.

நீங்கள் ஏமாறும் பணம் இந்தியாவில் இருந்தால் நாங்கள் மீட்டு கொடுப்போம். ஒரு வேளை வெளிநாட்டு மோசடி என்றால் மோசடி கும்பலை கைது செய்தாலும் எங்களால் பணத்தை மீட்க முடியாது. இந்த மின் கட்டண மோசடியில் பொதுமக்களாகிய நீங்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க காவல் துறை சார்பில் கேட்டு கொள்கின்றோம் என அவர் கூறியுள்ளார்

வீடியோ பார்க்க:-

https://twitter.com/stalin_ips/status/1582947244952547328


TAGS:


tangedco2

tneb online

eb bill

tneb reading

tneb login

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி வைரல் வீடியோ

Give Us Your Feedback