வாட்ஸப் பாதுகாப்பானது இல்லை,ஹேக் செய்யப்படும், வாட்ஸப் பயன்படுத்தாதீர்கள்-டெலகிராம் நிறுவனர் எச்சரிக்கை
வாட்ஸ் ஆப் வழியாக உங்கள் தரவுகள் மிக எளிதாக ஹேக் செய்யப்படுகிறது அதனால் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதை தவிர்க்கவும் என டெலிகிராம் நிறுவனர் பவேவ் டுரோவ் கூறியுள்ளார்.
உலகெங்கிலும் பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப் ஆகும்.வாட்ஸப் செல்போனில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும். கடந்த 2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோரால் வாட்ஸ் அப் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக்
நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கினார்கள்,
அதன்பின்பு பேஸ்புக் மெட்டா நிறுவனம் தன் பயனாளர்களை கவர பல முக்கிய
சிறப்பம்சங்களை அப்டேட் செய்து வருகின்றது.தற்போது வாட்ஸப் இல்லாத நபர்கள்
இல்லை என்றே சொல்லலாம்.
இந்நிலையில்
வாட்ஸப் தவிர வேறு எந்த ஆப் வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள் ஒருபோதும்
வாட்சப் ஆப் பாதுகாப்பாக இருக்காது எனவும் மேலும் டெலிகிராமை மட்டும்
பயன்படுத்துங்கள் என நான் அறிவுறுத்தவில்லை
வாட்ஸப்பில் இருந்து விலகி இருங்கள் என்றுதான் கூறுகிறேன்" மேலும்
வாட்ஸ்அப்பில் உள்ள பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக ஹேக்கர்களால்
உங்களுக்கு ஒரு விடியோ அனுப்பியோ, அல்லது விடியோ கால் செய்தோ உங்கள் மொபைலை
ஹேக் செய்ய முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். என கூறியுள்ளார்
டெலகிராம் நிறுவனரின் அறிவிப்பை படிக்க:-
Tags: தொழில்நுட்பம் முக்கிய செய்தி