Breaking News

மது அருந்தி பேருந்து ஓட்டினால் பணி நீக்கம் செய்யப்படும்- போக்குவரத்து இயக்குநர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 


மது அருந்தி பேருந்து ஓட்டினால் பணி நீக்கம் செய்யப்படும்- போக்குவரத்து இயக்குநர் அறிவிப்பு



சமீப காலமாக நமது கழக ஓட்டுநர்கள் மற்றும் ஓட்டுநர் உடன் நடத்துநர்களில் சிலர் தங்களது பணியின் பொழுது மது அருந்திய நிலையில் பணிபுரிவதாக புகார் பெறப்படுகிறது. மது அருந்திய நிலையில் பணிபுரிவது சட்டப்படி குற்றமாகும். மது அருந்திய நிலையில் பயணிகளிடையே நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுவதுடன் பயணிகளுக்கு நமது கழகத்தின் மீதான நம்பிக்கை குறைவதுடன் தொடர்ந்து நமது கழகப் பேருந்துகளில் பயணிப்பதை தவிர்க்க வாய்ப்புள்ளது. 

எனவே, அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் ஒட்டுநர் உடன் நடத்துநர்கள் பணியின் பொழுது மது அருந்திய நிலையில் பணி புரியக்கூடாது. அவ்வாறு பணியின் பொழுது மது அருந்திய நிலையில் பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு மிக அதிக அளவில் உள்ளது. நமது கழத்தில் மது அருந்திய நிலையில் பணியில் கண்டறியப்பட்டால் மிக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை (அடிப்படை சம்பளம் குறைப்பு, பணி நீக்கம்) எடுக்கப்படும். 

எனவே, பணியாளர்கள் மேற்படி குற்றத்திற்கான பின் விளைவுகளை அறிந்து பணியில் ஒழுங்கீனத்திற்கு இடம் கொடுக்காமல் பணிபுரிய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback