Breaking News

இன்று 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

 வட இலங்கையினை ஒட்டி இருக்கும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவுகின்ற வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 26 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



இன்று 10.10.2022

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்,ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி,கரூர், ,நாமக்கல், சேலம், திண்டுக்கல்,மதுரை, தேனி, திருச்சி,அரியலூர், பெரம்பலூர், கடலூர்,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை , கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி ,புதுக்கோட்டை,சிவகங்கை, விருதுநகர், மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

நாளை 11.10.2022 அன்று 

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர், தேனி, சேலம், மதுரை, திண்டுக்கல், வேலூர், திருச்சி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்றும், 

நாளை 12.10.2022 அன்று 

ராணிப்பேட்டை, திருப்பத்தூர் , கள்ளக்குறிச்சி, வேலூர், விழுப்புரம் , திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கடலூர் ,சேலம் ,தர்மபுரி, கோவை, ஈரோடு ,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று அறிவித்திருக்கிறது. 

சென்னை வானிலை ஆய்வுமைய அறிக்கை:-

https://mausam.imd.gov.in/chennai/mcdata/tamilrain_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback