Breaking News

25 ம்தேதி கரையை கடக்கும் சித்தரங் புயல் முழு விவரம் chitrang cyclone

அட்மின் மீடியா
0

 அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றைக்கு மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இருக்கிறது. இது வடமேற்கு அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.


தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு, அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று தெரிவித்திருக்கிறது

இதை அடுத்து வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை மறுதினம் அக்டோபர் 24ஆம் தேதி காலையில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் அதன் பின்னர் வடக்கு வட கிழக்கு திசையில் நகர்ந்து 25ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரை டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த புயல் சின்னம் காரணமாக 26 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் புயலால் காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புயல் வலுவிழந்த பிறகு தான் இயல்பு நிலைக்கு திரும்பும். அதன் பிறகே வடகிழக்கு பருவமழை தொடங்குவது குறித்து அறிவிக்கப்படும். அத்துடன் புயல் ஈரப்பதத்தை ஈர்த்துக் கொண்டு செல்வதால் பருவமழை வலுவாக தொடங்குமா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்

சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை:-

https://mausam.imd.gov.in/chennai/mcdata/tamilrain_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback