Breaking News

போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டு வாங்கினால் ஒருவருட சிறை தண்டனை

அட்மின் மீடியா
0

 சிம் கார்டு மற்றும் ஓடிடி சேவைகளுக்கு போலி ஆவணங்களை தயாரித்து வழங்கினால் ஓராண்டு சிறை அல்லது ரூ.50,000 அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிக்க இந்திய தொலைத்தொடர்பு வரைவு மசோதா 2022-ன் விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்புத் துறையின் வரைவு மசோதா பிரிவு 4 -ன்கீழ் துணைப் பிரிவு 7- ல் போலியான ஆவணங்கள் அல்லது அடையாளத்தை குறிப்பிட்டால் ஓராண்டு சிறை, ரூ.50,000 அபராதம், தொலைத் தொடர்பு சேவையை துண்டித்தல் அல்லது இவற்றில் ஏதேனும் இணைந்து தண்டனையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் இந்த மசோதாவில் உள்ள விதிகள் தற்போது வெளியாகியுள்ளது.அதில், போலி ஆவணங்கள் வைத்து சிம் கார்டு வாங்குவது சட்டப்படி குற்றம் எனவும், அப்படி போலி ஆவணங்கள் வைத்து வாட்சாப், டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளை பயன்படுத்தினால் அது குற்றம் எனவும்,அதற்கு அபராதமாக, 50 ஆயிரம் விதிக்கப்படும் எனவும், அபராதம் கட்ட தவறினால் 1 வருட சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

மத்திய தொலைத்தொடர்புத் துறை (டிஓடி) உருவாக்கியுள்ள இந்த புதிய மசோதா பொது தளத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு வரைவு மசோதா 2022

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861468

Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback