Breaking News

எகிப்தின் கல்லறையில் 2600 ஆண்டுகள் பழமையான சீஸ் கண்டுபிடிப்பு

அட்மின் மீடியா
0

எகிப்தில் உள்ள சக்காரா கல்லறையில் பாலாடைக்கட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த பாலாடை கட்டி சுமார் 2600 ஆண்டுகள் பழமையானது ஆகும் என்பது தான் ஆச்சர்யம் ஆகும் 

பொதுவாக பாலாடைக்கட்டி இரண்டு மூன்று நாட்களுக்குள் கெட்டுவிடும். ஆனால் 2600 ஆண்டுகள் பழமையான பாலாடைக்கட்டி கிடைத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கீழ் எகிப்தில் உள்ள சக்காரா என்ற இடம் மெம்பிசை தலைநகராகக் கொண்ட பண்டைய எகிப்திய பார்வோன்களின் கல்லறைகள் கொண்ட தொல்லியல் நகரம் ஆகும். 

எகிப்தின் தேசியத் தலைநகரமான கெய்ரோ பெருநகரத்திற்கு தெற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  சக்கரா நகரத்தின் வடக்கில் அபுசர் பகுதியும், தெற்கில் தச்சூர் தொல்லியல் நகரம் உள்ளது.மெம்பிசின் நகரத்தின் கிசாவின் பெரிய பிரமிடு வளாகம் முதல் முதல் சக்காரா நகரம் முதல் தச்சூர் நகரம் வரையிலான கல்லறை வளாகங்களை யுனெஸ்கொ நிறுவனம், 1979-இல் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.

 இந்த சக்காராவில் நீண்ட நாட்களாக அகழாய்வு பணி நடந்து வருகிறது அதில் கண்டுபிடிக்கபட்ட மண் பானையில் பாலாடை கட்டி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இதனை ஆய்வுக்கு உட்படுத்திய ஆராய்ச்சியாளர்கள் இது கிமு 688 மற்றும் 525 க்கு இடையில் 26 மற்றும் 27 வது வம்சங்களின் காலத்தில் புதைக்கப்பட்டதாக இருக்கலாம் என்கின்றனர். மேலும் இந்த பாலாடைக்கட்டி, ஆடு மற்றும் செம்மறி ஆட்டின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எகிப்தில் பாலாடைக்கட்டியினை  ஹலோமி என்று அழைக்கின்றார்கள்

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback