Breaking News

பெண்களுக்கு இலவச பேருந்து எளிதில் அடையாளம் காண பிங்க் கலர் பேருந்து அறிமுகம்

அட்மின் மீடியா
0

சென்னையில் இயங்கி வரும் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் பிங்க் வண்ணம் பூசப்படுகிறது.


கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில், அனைத்து மகளிருக்கும் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி ஆட்சிக்கு வந்தபின்னர் அனைத்து பெண்களும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்காக தனியாக பயணச்சீட்டும் வழங்கப்பட்டு வருகிறது.


சென்னை மாநகர பேருந்துகளில் வெள்ளை போர்டு, கிரீன் போர்டு, புளு போர்ட், டிஜிட்டல் என பல்வேறு விதமான பேருந்துகள் இயங்குகின்றன.இதனால் சாதாரண கட்டண பேருந்துகளை மகளிரால் அடையாளம் காண முடியாமல் எது இலவச பேருந்து என்ற குழப்பம் மக்கள் மத்தியில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மகளிர் கட்டணமில்லா பேருந்தை எளிதாக கண்டுபிடிக்க ஏதுவாக மகளிர் கட்டணமில்லா பேருந்தின் முகப்பு பக்கம் மற்றும் பின்புறம் என இரு புறத்திலும் பிங்க் வண்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும் இதனை நாளை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்  நாளை தொடங்கி வைக்கிறார். 




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback