பேருந்தில் தொங்கியவாறு பயணம் செய்த மாணவர் திடீரென கீழே விழுந்து விபத்து நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ
மேல்மருவத்தூர் அருகில் அரசு பேருந்தில் தொங்கியவாறு பயணம் செய்த மாணவர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே செய்யூரில் இருந்து அச்சரப்பாக்கம் வரை செல்லும் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்தனர்.
பேருந்து சாலையில் சென்றுகொண்டிருந்த போது பேருந்தின் பின்பக்க படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களில் ஒரு மாணவன் திடீரென கீழே விழுந்தான். பின்பக்க படிக்கட்டில் இருந்து கீழே விழுந்ததாலும், அந்த நேரத்தில் பின்னால் வாகனங்கள் எதுவும் வராததாலும் அந்த மாணவன் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்.
பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வரும் நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க:-
https://twitter.com/journalistraj7/status/1564462298202505216/video/1
Tags: வைரல் வீடியோ