Breaking News

இனி தட்கல் டிக்கெட்டை கேன்சல் செய்தாலும் பணம் திரும்ப பெறலாம்- இந்திய ரயில்வே அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி, சமீபத்தில் தனது இணையதளத்தில் பல புதிய அம்சங்களை சேர்த்துள்ளது. குறிப்பாக, புஷ் நோட்டிபிகேஷன் வசதியைத் தொடங்கியுள்ளது.இதன் மூலம், பயணிகள் இருக்கை வசதி உள்ளிட்ட பல வகையான வசதிகள் பற்றிய தகவல்களைப் பெற முடியும். 

ரயிலில் இருக்கைகள் காலியாக இருந்தால், அது குறித்த அறிவிப்பு பயணிகள் மொபைல் போனுக்கு தகவலாக அனுப்பப்படும்.பயணிகள் தங்கள் வசதிக்கேற்ப காலியாக உள்ள இருக்கையை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக, பயணிகள் முதலில் ஐஆர்சிடிசி இணையதளத்திற்கு சென்று புஷ் நோட்டிபிகேஷன் வசதியை பெற வேண்டும்.

இனி ரயில் பயணத்திற்கான முன்பதிவில், தட்கல் முறையில் டிக்கெட்டை முன்பதிவு செய்து விட்டு, பயணம் மேற்கொள்ள முடியாமல், கடைசி நேரத்தில் அந்த டிக்கெட்டை ரத்து செய்தாலும் பாதி பணம் திரும்ப கிடைக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback