சென்னையில் முகக்கவசம் கட்டாயம்- சென்னை மாநகராட்சி உத்தரவு
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், சமீப காலமாக தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு 2000-ஐ கடந்து பதிவாகி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 2,672 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் 1,072 பேருக்கும், செங்கல்பட்டில் 373 பேருக்கும், கோயம்புத்தூரில் 145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்றும் வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், துணிக்கடைகள் போன்ற இடங்களில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்