Breaking News

அரசு வாகனங்கள் தவிர தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்ட கூடாது - டிஜிபி உத்தரவு!

அட்மின் மீடியா
0

அரசு வாகனங்கள் தவிர தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்ட கூடாது - டிஜிபி உத்தரவு!

காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் இருந்து போலீஸ் என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநரும், சட்டம் ஒழுங்கு டிஜிபியுமான சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார் அதில்...

தமிழகத்தில் உள்ள காவல்துறை உயரதிகாரிகள் அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது. 

காவலர்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தும் வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர்களை பயன்படுத்தக்கூடாது 

அலுவலக ரீதியாக பயன்படுத்தும் வாகனங்களில் மட்டுமே போலீஸ் என்ற ஸ்டிக்கர் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 

எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்துறை ஆணையர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் தங்கள் கீழ் பணிபுரியும் காவலர்கள் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்ற  ஸ்டிக்கர் பயன்படுத்தி வந்தால் அதை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback