அதிமுக அலுவலகம் சீல் வழக்கு ஜூலை 18ம் தேதி தீர்ப்பு- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்ததை எதிர்த்து ஓபிஎஸ், இபிஎஸ் தொடர்ந்த வழக்கு
தீர்ப்பை ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது
திமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட வன்முறையை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. போலீசார் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் தான் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. குற்றவியல் நடைமுறைச் சட்டம் IPC 145ன் கீழ் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் வன்முறையில் 55 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதும் இரு தரப்பினருக்கு இடையில் சமாதானம் ஏற்படவில்லை. மீண்டும் பிரச்சினை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதமும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்