ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடியை பறக்கவிட வேண்டும் - பிரதமர் மோடி
அட்மின் மீடியா
0
ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நாட்டு மக்கள் அனைவரும் வீடுதோறும் மூவர்ண கொடியை பறக்கவிட வேண்டும்
75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஆண்டு அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஒவ்வொரு வீடுகளிலும் தேசிய கொடி இயக்கம் மூலம் மேலும் வலுப்படுத்துவோம். ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை உங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுங்கள். இந்த இயக்கம் தேசிய கொடியின் நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும்.’ என பதிவிட்டுள்ளார்.
Tags: இந்திய செய்திகள்