வரி ஏய்ப்பு குறித்து தகவல் தெரிவிக்கும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பரிசு பணம் வழங்க உத்தரவு
வரி ஏய்ப்பு குறித்து தகவல் தெரிவிக்கும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பரிசு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் வணிக வரித் துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்ட அரசாணையில்
2022 - 2023-ம் நிதியாண்டில் வணிகவரித்துறை மானியக் கோரிக்கையின்போது, வரி ஏய்ப்பு குறித்து வணிக வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கும், வரி ஏய்ப்பை சிறப்பாக கண்டுபிடித்து வரி வசூல் செய்யும் வணிகவரித் துறை அலுவலர்களுக்கும் வெகுமதி வழங்க நடப்பாண்டில் 1.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மேலும் இடைக்கால வெகுமதியாக 5 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
ரூ.4 லட்சத்துக்கு மேல் தருவதாக இருப்பின் வணிக வரிகள் ஆணையரின் பரிந்துரையின் பேரில் அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஒரு தனிநபர் அல்லது தகவல் அளிப்பவர்களின் குழுவிற்கு வெகுமதி அளிக்கப்படும்.
Tags: இந்திய செய்திகள்