Breaking News

படித்துவிட்டார் என்பதற்க்காக பெண்களை வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்தக் கூடாது! கோர்ட்டு அதிரடி உத்தரவு!

அட்மின் மீடியா
0

படித்துவிட்டார் என்பதற்க்காக பெண்களை வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்தக் கூடாது! கோர்ட்டு அதிரடி உத்தரவு!



மும்பை ஐகோர்ட்டில் கணவனை பிரிந்த பட்டதாரி பெண் ஒருவர் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர் பட்டதாரி பெண் என்பதால் வேலைக்கு சென்று தன்னை தானே கவனித்துக் கொள்ள வேண்டும். ஜீவனாம்சம் தர முடியாது என எதிர்மனுதாரர் சார்பில் கூறியதற்க்கு 

ஒரு பெண் பட்டதாரியாக இருப்பதால் அவரை வேலைக்கு செல்லும்படி யாரும் கட்டாயப்படுத்த முடியாது. ஒரு பெண் வேலைக்கு செல்வதும், வீட்டிலேயே உட்கார்ந்து இருப்பதும் அவரது சொந்த விருப்பம். இதில் யாரும் தலையிட முடியாது’’ என்றும்

இன்று நான் இந்த கோர்ட்டில் நீதிபதியாக இருக்கிறேன். நாளை நான் வீட்டில் உட்காரலாம். அப்போது நீங்கள், நான் படித்து இருக்கிறேன் வீட்டில் சும்மா இருக்க கூடாது என சொல்வீர்களா? " என்றார்.

பின்னர் மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதி தள்ளிவைத்தார்.


 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback