AltNews இணை நிறுவனர் பிரபல பத்திாிக்கையாளா் முஹம்மது ஜுபைா் கைது
பிரபல FACT CHECK உண்மைச் சரிபார்ப்பு இணையதளமான AltNews இன் இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று 2020-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றுக்காக டெல்லி போலீஸ் விசாரணைக்கு முஹம்மது ஜுபைா் சென்றிருந்தார் மேலும் அந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றிருந்தார் ஆனால் நேற்று இரவு திடீரென முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டார். 2018-ம் ஆண்டு மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ட்விட்டர் பதிவுகளை முகமது ஜுபைர் வெளியிட்டிருந்தார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார் என டெல்லி போலிஸார் தகவல் தெரிவித்தனர்அத்துடன் முகமது ஜுபைர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதுக்குறித்து AltNews-ன் மற்றொரு இணை நிறுவனர் பிரதிக் சின்ஹா தனது டிவிட்டர் பக்கத்தில்
முகமது ஜுபைர் வேறு ஒரு வழக்கில் விசாரணைக்காக டெல்லிக்கு அழைக்கப்பட்டார். ஆனால் இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். மேலும் அதுக்குறித்த அறிவிப்பும் முறையாக எங்களுக்கு வழங்கப்படவில்லை. பலமுறை கேட்டும் எங்களுக்கு முதல் தகவல் அறிக்கையின் நகல்கூட கொடுக்கவில்லை,என்று குற்றம்சாட்டியுள்ளார்.
முகமது ஜுபைர் என்பவர் FACT CHECK பிரபல உண்மை சரிபார்ப்பு இணையதளமான Alt News இன் இணை நிறுவனர்களில் ஒருவர். இவரது இணையதளத்தில் சமூகவலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகள் தொடர்பான தகவல்களை ஆராய்து அதன் உண்மைகளை ஆதாரங்களுடன் கொடுக்கும் தளமாகும்
இந்நிலையில், முகமது ஜுபைர் கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி,
பாஜகவின் வெறுப்பு மற்றும் மதவெறியை அம்பலப்படுத்தும் ஒவ்வொரு நபருக்கும் அக்கட்சியால் அச்சுறுத்தல் இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.ஒரு உண்மையின் குரலைக் கைது செய்தால் இன்னும் ஆயிரம் குரல் எழும்பும் என்றும் தமது டுவிட்டர் பதிவில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
Tags: இந்திய செய்திகள்