ஆப்கானிஸ்தானை தாக்கிய நில நடுக்கம் 920க்கும் அதிகமானோர் உயிரிழப்பு என அரசு அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.
பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கிமீ (27 மைல்) தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் பலியானோர் எண்ணிக்கை 920- ஆக உயர்ந்துள்ளது.மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என தெரிகின்றது
பக்திக்கா (Paktika) மாநிலத்தின் கிழக்கே இன்று அதிகாலையில், 6.1 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் நேர்ந்ததாகக் கூறப்பட்டது.அதில், குறைந்தது 600 பேர் காயமுற்றனர்.கோஸ்ட் (Khost) நகரிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவில், பாக்கிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அருகே, 51 கிலோமீட்டர் ஆழத்தில், நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக, அமெரிக்கப் புவியியல் ஆய்வகம் தெரிவித்தது.ஆப்கானிய வீடுகள் பல, நிலநடுக்கத்தால் முற்றிலும் அழிந்துவிட்டன என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றது
Tags: வெளிநாட்டு செய்திகள்