Breaking News

300 ஆண்டுகளுக்கு முன்பு 1.5 லட்சம் கோடி தங்கத்துடன் கடலில் முழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு- ஆழ்கடலில் எடுக்கப்பட்ட வீடியோ

அட்மின் மீடியா
0

300 ஆண்டுகளுக்கு முன்பு சான் ஜோஸ் என்ற கப்பல் கொலம்பிய தலைநகர் போகோட்டோ அருகே 600 பேருடன் கடலில் மூழ்கியது. தற்போது இந்தக் கப்பல் மூழ்கிய இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

 

ஆனால் தற்போது அந்தக் கப்பல் யாருக்குச் சொந்தம் என்பதில் பலர் சண்டையிட்டு வருகின்றனர் ஏன் என்றால் அந்தக் கப்பலில் உள்ள ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான தங்கத்துக்குதான் இந்த சண்டை நடக்கிறது. 

1708ல், 'சான் ஜோஸ் கலியன்' என்ற ஸ்பெயின் போர் கப்பல் கொலம்பியா நோக்கி சென்று கொண்டிருந்தபோது, பிரிட்டன் படைகளின் தாக்குதலில் கடலில் மூழ்கியது.

கடந்த 2015-ல் அந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.எனினும் கொலம்பிய அரசு தங்கப் புதையலுடன் மூழ்கிய சான் ஜோஸ் கப்பல் இருக்கும் இடத்தை துல்லியமாக அறிவிக்கவில்லை. 

இந்நிலையில் தங்கத்துடன் மூழ்கிய சான் ஜோஸ் கப்பலுக்கு அருகே மேலும் 2 கப்பல்கள் மூழ்கி இருக்கும் வீடியோவை, ஸ்பெயின் அரசு வெளியிட்டுள்ளது. 

அதில் கப்பல் உள்ளே இருக்கும் விலை மதிப்பு இல்லாத பொருட்கள் காணப்பட்டன. இந்த கப்பலின் பாகங்கள், விலை மதிப்பில்லாத பொருட்கள் பல இப்போதும் 3000 அடி ஆழத்தில் கடலுக்கு கீழே உள்ளன.

அந்த வீடியோவில் சான் ஜோஸ் கப்பலுக்கு அருகே 2 கப்பல்கள் மூழ்கிக் கிடக்கின்றன. அதன் அருகே நீலம், பச்சை நிறங்களில், கடலின் அடியில் சிதறிக் கிடக்கின்ற தங்க நாணயங்கள், மட்பாண்டங்கள் மற்றும் பீங்கான் கோப்பைகள் தெரிகின்றன. தவிர, ஒரு பீரங்கியும் கடலின் அடிப்பரப்பில் காணப்படுகிறது. இதுதொடர்பாக ஆராய்ச்சி நடப்பதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
கப்பலை கண்டுபிடித்தாக கூறும் அமெரிக்காவின் எம்ஏசி நிறுவனம், ஸ்பெயின், கொலம்பியா நாடுகள் என மூன்று தரப்பும் அதிலுள்ள தங்க புதையலுக்காக சண்டையிட்டு கொள்கின்றன. இது தொடர்பான வழக்கு கொலம்பிய உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சான் ஜோஸ் என்ற கப்பலில் 1 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் புதைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கப்பலில் உள்ள பொக்கிஷங்கள் பிரிக்க முடியாத ஒன்றுபட்ட பூர்வீகம் என்றும், முழுக்க முழுக்க கொலாம்பியாவுக்கே சொந்தம் என்றும் அந்நாடு அதிபர் கூறியுள்ளார்.


வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=j7TxGoO8Ztc

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback