முஸ்லீம் பெண்கள் 16 வயதில் திருமணம் செய்யலாம்: பஞ்சாப் ஐகோர்ட் தீர்ப்பு
முஸ்லீம் பெண்கள் 16 வயதில் திருமணம் செய்யலாம்: பஞ்சாப் ஐகோர்ட் தீர்ப்பு
முஸ்லிம் பெண்கள் 16 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என பஞ்சாப் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 16 வயது முஸ்லிம் பெண் ஒருவர் தனக்கு விருப்பமான 21 வயது நபருடன் கடந்த ஜூன் 8, 2022ஆம் தேதி இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துள்ளார்ஆனால் பெற்றோர் அனுமதி இல்லாமல் திருமணம் செய்து கொண்டதால் இரு குடும்பத்தார்கள் எதிர்ப்பு இருப்பதால் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் பஞ்சாப் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜஸ்ஜித் சிங் பேடி முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது.
அதாவது 16 வயதுக்கு மேற்பட்ட முஸ்லீம் பெண் தனக்கு விருப்பமான நபரைத் திருமண செய்து கொள்வதில் தவறு இல்லை என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மனுதாரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்து கொண்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்திய அரசியலமைப்பு கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளை அவர்கள் பறிக்க முடியாது என்றார்.
ம ேலும், இஸ்லாமிய ஷரியத் விதியை மேற்கோள் காட்டி நீதிபதி முஸ்லீம் பெண்ணின் திருமணம் முஸ்லீம் தனிநபர் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.முஸ்லீம் மதத்தின் சட்டப்படி 16 வயதில் ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் அதனால் இந்த தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அதிரடி தீர்ப்பை வழங்கினார். முஸ்லீம் மதத்தின் சட்டப்படி ஒரு பெண் பருவமடைந்து விட்டால் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற விதி இருப்பதையும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு படிக்க
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி