Breaking News

BREAKING இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா

அட்மின் மீடியா
0

 BREAKING இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா



இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் வேறுவழியே இல்லாமல் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்

அண்டைநாடான இலங்கையில் விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கிஉள்ளது.இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தீவிரமாக கடந்த ஒரு மாதமாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள்

இந்நிலையில் பிரதமர் ராஜபக்சேயின் அலுவலகம் எதிரே எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தினர். அவர்களை அரசு ஆதரவாளர்கள் தாக்கி விரட்டினர். இதனால் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் சிலர் காயமுற்றனர்.

போராட்டக்காரர்கள் மீது பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பல இடங்களில் போராட்டங்கள் தீவிரம்ராஜபக்சே ஆதரவாளர்கள் சென்ற பேருந்தை, பொதுமக்கள் அடித்து நொறுக்கியதால் பதற்றமான சூழல் நிலவுகின்றது

கொழும்பில் ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் வேறுவழியே இல்லாமல் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்.அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback