புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ள பிரசாந்த் கிஷோர்???
தேர்தல் உத்தி ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இன்று காலை வெளியிட்ட ட்விட்டர் பதிவை தொடர்ந்து, அவர் அரசியல் கட்சித் தொடங்குகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில்
ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும், மக்கள் சார்பான கொள்கையை வடிவமைக்க உதவுவதற்கும் எனது ஆலோசனையானது 10 ஆண்டுகள் ரோலர்கோஸ்டர் சவாரிக்கு வழிவகுத்துள்ளது
எனவே, மக்கள் நல்லாட்சிக்கான பாதைக்கு செல்ல வேண்டிய நேரம் இது. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன் தெரிவித்துள்ளார். பிகாரிலிருந்து தொடங்கவுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனால், பீகார் மாநிலத்தை மையமாக வைத்து பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags: இந்திய செய்திகள்