Breaking News

சென்னையில் அழகு நிலையங்கள், மசாஜ் சென்டர் உரிமம் பெற புதிய நிபந்தனைகள் - சென்னை மாநகராட்சி

அட்மின் மீடியா
0

சென்னையில் ஸ்பா மசாஜ் சென்டர் மற்றும் அழகு நிலையங்கள் செயல்படுவதற்கான தொழில் உரிமம் பெற புதிய விதிகளை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.  இந்த புதிய நிபந்தனைகள் நேற்று நடந்த கவுன்சில் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, ஒப்புதல் பெறபட்டுள்ளது.



கதவுகளை பூட்டிய நிலையில் மசாஜ் சென்டர்கள் செயல்படக்கூடாது.மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் செயல்படும் நேரத்தில் வெளிப்புற கதவு திறந்தே இருக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து இயங்கக்கூடாது.

 வாடிக்கையாளர்களுக்கு என தனி வருகைப்பதிவேடு இருக்க வேண்டும்

எந்த வகையிலும் பாலியல் தொடர்பான சேவைகள் வழங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும்

காவல் துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் புகார் அடிப்படையில் சோதனை செய்வர்

கொரோனா உள்ளிட்ட தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு சேவை வழங்கக்கூடாது.

ஒருவருக்கு சேவை வழங்கிய பின்னர், பணியாளர்கள் தங்களது கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். அதன் பின்னர் தான் அடுத்தவருக்கு சேவையை வழங்க வேண்டும்.

ஒருவருக்கு சேவை வழங்கிய பின் அடுத்தவருக்கு சேவை வழங்குவதற்கு முன், கருவிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்

பக்க விளைவுகள் ஏற்படுத்தக் கூடிய அழகு சாதன பொருட்களை பயன்படுத்தக் கூடாது.

உரிமம் விண்ணப்பிக்கும் நபர் உரிய படிப்பு படித்திருக்க வேண்டும்

உள்ளிட்ட வழிமுறைகளை உள்ளடக்கி விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று நடைபெற்ற மன்ற கூட்டத்தில் அனுமதி அளித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback