தாஜ்மஹால் நிலம் ஜெய்ப்பூர் ராஜ குடும்பத்திற்கு சொந்தம்:பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு
தாஜ்மஹால் கட்டடம் கட்டப்பட்ட நிலம் முதலில் ஜெய்ப்பூர் அரச குடும்பத்துக்கு சொந்தமானது என்றும், அதன்பின்னர்,இந்த நிலம் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கையகப்படுத்தப்பட்டது என்றும்,ராஜஸ்தானின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தியா குமாரி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக தாஜ்மஹாலில் ஹிந்து சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய, அங்குள்ள 20 அறைகளைத் திறக்க இந்திய தொல்லியல் துறையை அறிவுறுத்துமாறு அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ள நிலம் ஜெய்ப்பூர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தது என பாஜக எம்.பி. தியா குமாரி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் தியா குமாரி :-
ஜெய்ப்பூர் ராஜ குடும்பத்திடமிருந்து ஷாஜகான் நிலத்தைக் கையகப்படுத்தியபோது, அவர்களால் அதை எதிர்க்க முடியவில்லை. இந்த நிலம் ஜெய்ப்பூர் குடும்பத்துக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன
அதை ஷாஜகான் கையகப்படுத்தினார் ஆனால் அப்போது நீதிமன்றம் இல்லாததால் அந்த நேரத்தில் நீதிமன்றம் சென்று இருக்க முடியாது பதிவேடுகளை ஆய்வு செய்த பிறகே விஷயங்கள் தெளிவாகும்.
மேலும் அப்போதைய சூழ்நிலைகள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எங்களிடம் உள்ள ஏதேனும் ஆவணங்களை வழங்குமாறு நீதிமன்றம் கேட்டால் நாங்கள் வழங்குவோம் என்று கூறியுள்ளார்.
தாஜ்மஹாலிலுள்ள கதவுகளைத் திறக்க யாரோ வலியுறுத்தியிருப்பது நல்ல விஷயம். அதன்மூலம் உண்மை வெளிவரட்டும். இந்த விவகாரம் குறித்து நாங்களும் தற்போது ஆராய்ந்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்
Tags: இந்திய செய்திகள்