45 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - இன்றைய விலை என்ன தெரியுமா
மத்திய அரசின் கலால் வரி குறைப்பை தொடர்ந்து சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. பெட்ரோல், டீசல் விலையில் 45 நாட்களுக்கு பின்னர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
பெட்ரோல் மீதான மத்தியகலால் வரி லிட்டருக்கு ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6ம் குறைக்கப்படுகிறது. இதன் எதிரொலியால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50ம், டீசல் லிட்டருக்கு ரூ.7ம் விலை குறையும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 45 நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், மத்திய அரசு கலால் வரியை குறைத்ததைத் தொடர்ந்து இன்று பெட்ரோல் 8.22 ரூபாய் குறைந்து 102.63 காசுகளுக்கும், டீசல் 6.70 ரூபாய் குறைந்து 94.24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்