குண்டர் சட்டம் என்றால் என்ன? முழு விவரம்...
அட்மின் மீடியா
0
குண்டர் சட்டம் என்றால் என்ன?
தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம், 1982 (குண்டர் தடுப்புச் சட்டம்) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் 1982 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது வன்செயல்கள், மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள், வனச்சட்டத்தை மீறுபவர்கள், போக்கிலிகள் போன்ற சமுதாய விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டச் சட்டம். இச்சட்டம் குண்டர்கள் தடுப்புச் சட்டம் என பொதுவாக தமிழகத்தில் அழைக்கப்படுகின்றது.
ஒருவர் மீது குண்டர் சட்டம் போடப்படவேண்டுமானால் நகர்ப்புறங்களில் காவல்துறை ஆணையரும், கிராமப்புறங்களில் மாவட்ட ஆட்சியர் மட்டுமே இந்த சட்டத்தை செயல்படுத்த அதிகாரம் கொண்டவர்கள் ஆவார்கள்
குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு நபர் கைது செய்யப்பட்டால் அவர் குறைந்தது 12 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும்
அந்த நபர் மீது எந்தவிதமான விசாரணையும் மேற்கொள்ளத் தேவையில்லை
ஒரு நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நிபந்தனைகளுடன் விடுவிக்கலாம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள. நிபந்தனைகளை அவர் மீறினால் மேலும் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒரு நபர் தன் மீது குற்றம் இல்லை என்று நிரூபிக்க விரும்பினால் அவர் சார்பில் வழக்கறிஞர் அமைக்க முடியாது. அவர் சார்பாக அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் முறையிட்டு குழுவை அமைத்து அதற்கான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி