இஸ்லாத்தை ஏற்றார் ஆசிரியர் சபரி மாலா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
இஸ்லாத்தை ஏற்றார் ஆசிரியர் சபரி மாலா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழ்நாட்டில் 2017ஆண்டு நீட்(NEET) என்ற மருத்துவ நுழைவுத் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது.
இதனால் மாநில கல்விமுறை படித்த அரியலூர் மாணவி அனிதா பாதிக்கப்பட்டார்.
மாணவி அனிதாவிற்க்கு மருத்துவ கல்வி மறுக்கப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நீட் (NEET) என்ற மருத்துவ நுழைவுத் தேர்வு ஏழை மாணவர்களுக்கு மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது என்று உணர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் சபரிமாலா இந்தியா முழுவதும் ஒரே கல்விமுறையை கொண்டு வர வேண்டி தனது அரசு ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் இவர் கல்வி சமத்துவம், பெண்குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண் உரிமைக்காகவும் பாடுபட்டார்.
இவர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் ஒரே கல்விக்காக இலக்கு 2040 என்ற அமைப்பை தமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டு தொடங்கினார்.
கடந்த சில மாதங்களாக இவர் இஸ்லாத்தை பற்றி சொற்பொழிவு ஆற்றிவந்த நிலையில்
தற்போது இஸ்லாமியர்களின் புனித காபாவில் அவர் தான் இஸ்லாத்க்தை ஏற்று கொண்டு தனது பெயரை பாத்திமா என மாற்றி கொண்டதாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்
Tags: மார்க்க செய்தி வைரல் வீடியோ