Breaking News

ஆந்திராவில் ஆம்புலன்சில் பணம் அதிகம் - மகனின் உடலை 90 கிலோமீட்டர் பைக்கில் எடுத்து சென்ற தந்தை வைரல் வீடியோ....

அட்மின் மீடியா
0

ஆந்திராவில் மகனின் உடலை கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர் அதிகப்படியான பணம் கேட்டதால் இறந்த மகனை இருசக்கர வாகனத்தில்  கொண்டு சென்ற தந்தை

 

ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பெத்வேல் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் நரசிம்மலு. இவரது மகன் ஜெசேவா சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இந்த நிலையில், சிறுவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனையடுத்து தனது மகனின் உடலை மருத்துவமனையிலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக தனியார் ஆம்புலன்ஸை அணுகியுள்ளார். அவர்கள் சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல அதிகப்படியான பணம் கேட்டுள்ளனர். 

அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்க முடியாததால் தனது மகனின் உடலை தனது உறவினர் ஒருவரின் பைக்கில் வைத்து 90 கிலோமீட்டர் எடுத்து சென்றுள்ளார். 

இந்த வீடியோவை ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தனது டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

  

வீடியோ:-

https://twitter.com/ncbn/status/1518836485511802880

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback