எஸ்.ஐ. தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 10 நாட்கள் கால அவகாசம்
தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க, மேலும் 10 நாட்கள் கால நீட்டிப்பு செய்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தமிழக காவல் துறையில் 444 உதவி ஆய்வாளர்களுக்கான காலி பணியிடம் அறிவிக்கப்பட்டது.
2022-ஆம் ஆண்டுக்கான உதவி ஆய்வாளர் தேர்வு வருகின்ற ஜூன் மாதம் நடைபெற உள்ளது. மேலும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி இன்றுடன் முடியவிருந்த நிலையில், வரும் 17-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்க:-
Tags: தமிழக செய்திகள்