ஹிஜாப் வழக்கு கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம் PDF டவுன்லோடு செய்ய
ஹிஜாப் வழக்கு கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம் PDF டவுன்லோடு செய்ய
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய கர்நாடாக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. அதனை மீறி ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, சில மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை வகுப்பறைகளுக்குள் அனுமதித்தால், நாங்களும் காவித்துணி அணிந்து வருவோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஹிஜாப் தடைக்கு எதிராக கல்லூரி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்
இந்த வழக்கு தனி நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாணவிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஹிஜாப் விவகாரம் இந்த மோசமான நிலையை அடைவதற்கு மாநில அரசின் மோசமான நிலைபாடு தான் என குற்றம் சாட்டினார்.
ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சனையை உயர்நீதிமன்றத்தின் விரிவான அமர்வு விசாரிக்கும் என நீதிபதி கிருஷ்ணா தீட்சித் தெரிவித்திருக்கிறார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஹிஜாப் தொடர்பான வழக்கு விசாரணையை கூடுதல் அமர்வுக்கு மாற்றி உத்தவிட்டார். அதனை தொடர்ந்து 3 நீதிபதிகள் அடங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு பிப்ரவரி 10-ம் தேதி முதல் தினமும் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை மாணவர்கள் எந்தவிதமான மத உடைகளையும் அணியாமல் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
தொடர்ந்து 11 நாள்களாக இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் ஹிஜாப் விவகார வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பானது கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஷ்தி நீதிபதிகள் காஷி, கிருஷ்ணா தீட்ஷித் அமர்வு உத்தரவிட்டுள்ளார்கள்
இந்நிலையில், ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய மத சட்டத்தின் அத்தியாவசிய விஷயம் அல்ல. ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் அடிப்படை அவசியம் கிடையாது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கிள்ளது.
கல்வி நிலையங்களில் சீருடை பரிந்துரைக்கப்படுவது அடிப்படை உரிமைகள் மீதான நியாயமான கட்டுப்பாடு ஆகும்,அதை மாணவர்கள் எதிர்க்க முடியாது
https://drive.google.com/file/d/1M0WH0do3B1oWwoOst8x21Th_mKMcsNqU/view?usp=sharing
Tags: இந்திய செய்திகள்