Breaking News

ரூபாய் 107ஐ தாண்டிய பெட்ரோல் விலை! இப்படி இருந்தா எப்படி வண்டி ஓட்டுவது?

அட்மின் மீடியா
0

இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.107.45-க்கு விற்பனை.



பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.

இந்நிலையில்,இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.107.45-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.97.52-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் 9 வது முறையாக பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளன.அதன்படி,கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.05 ஆகவும் ,டீசல் விலை லிட்டருக்கு ரூ.6.09 ஆகவும் அதிகரித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback