மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 நேரடியாக வங்கிக்கணக்கில்- நிதியமைச்சர் அசத்தல் அறிவிப்பு! முழு விவரம்....
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது,ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது இந்நிலையில்
2022 -23 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில் அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி என அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து மேல்படிப்புக்கு செல்லும் அரசு பள்ளி மாணவிக்கு திட்டத்தின் கீழ் மாதம் மேல்படிப்பை என்று முடிக்கும் வரை மாதம் ரூபாய் ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்