Breaking News

உபியில் அசாதுதீன் ஓவைசி சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு- யாருக்கும் காயம் இல்லை

அட்மின் மீடியா
0
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 

இதில் பா.ஜ.க, சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. 

ஹைதராபாத் மக்களவை தொகுதியின் உறுப்பினரும், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசியின் கட்சியும் உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிடுகிறது.


ஏ ஐ எம் ஐ எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி இன்று உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு டெல்லி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். 


அப்போது சாஜர்சி சுங்கச்சாவடி அருகே கார் சென்றுகொண்டிருந்த போது, 4 பேர் திடீரென கார் மீது 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். அதில் காரின் டயர்கள் பஞ்சர் ஆகியுள்ளது.

அதன்பின் அவர் பாதுகாப்பாக வேறு காரில் ஏறி சென்றுள்ளார். 

Give Us Your Feedback