ரேஷன் கடைகளில் இனி கை ரேகை வேண்டாம்…தமிழக அரசு
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டால் QR-ஐ ஸ்கேன் செய்து வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ள வரும் ரேஷன் அட்டைதாரர்களின் கைரேகைப் பதிவு, இயந்திரங்களில் சரியாக பதிவாகவில்லை என்றும்,இதன் காரணமாக, அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதில் சிரமம் இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டால், விற்பனை முனைய இயந்திரத்தில் QR-ஐ ஸ்கேன் செய்தும், குடும்ப அட்டையின் எண்ணை பதிவு செய்தும், பதிவேட்டில் ஒப்புதல் பெற்று குடும்பஅட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி உடனடியாக வழங்க அனைத்து நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்