தடுப்பூசி செலுத்தாதவர்கள் வெளிநாடு செல்ல தடை - அமீரக அரசு அறிவிப்பு
ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தடுப்பூசி செலுத்துவதையும் தீவிரப்படுத்தி வருகிறது.
தற்போது புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் பரவி வருவதையடுத்து புதிய கட்டுப்பாடு ஒன்றை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு விதித்துள்ளது.
அதன்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத குடி மக்கள் ஜனவரி 10-ந்தேதி முதல் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய அவசர நெருக்கடி பேரிடர் மேலாண்மை ஆணையம் டுவிட்டரில்
கொரோனா தடுப்பூசி போடப்படாத ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமக்கள் பயணம் செய்வதற்கு ஜனவரி 10-ந்தேதி முதல் தடை விதிக்கப்படும்.முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் பூஸ்டர் டோசை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்