அண்ணா பல்கலை மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு! அதிகாரபூர்வ அறிவிப்பு..!
அட்மின் மீடியா
0
பிப்ரவரி 19-ஆம் தேதி இருந்த செமஸ்டர் தேர்வுகள் மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளில் நடைபெறவிருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது தேதி மாற்றம் செய்து அறிவித்துள்ளது.
அதன்படி தேர்வு தேதிகளில் மாற்றம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய அட்டவணையில், பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவிருந்த இளநிலை, முதுநிலை படிப்பு தேர்வுகள் மார்ச் 5 ,6 ,9 ,11-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்