ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி, வழிகாட்டு நெறிமுறைகள் இதுதான் - தமிழக அரசு!
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் கடைபிடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
காளையுடன் உரிமையாளர் ஒருவர், உதவியாளர் ஒருவர் என 2 பேருக்கு மட்டுமே அனுமதி.
ஜல்லிக்கட்டு போட்டியை ஒருங்கிணைக்கும் அதிகாரிகள், மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்
2 நாட்களுக்கு முன்பு பெறப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
அடையான அட்டை இல்லாத நபர்களுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.
150 பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி
ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் இணைய வழியாக காணலாம்
அறிவுறுத்தப்படுகிறது.தமிழகத்தில் கொரோனா பரவல் மத்தியில் ஜல்லிக்கட்டு பூட்டி நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்