Breaking News

இஸ்லாமிய பெண்களை ஏலம் விட்ட புல்லிபாய் ஆப் விவகாரம் 21 வயது மாணவர் கைது.

அட்மின் மீடியா
0

21 வயது இஞ்சினியரிங் மாணவரை கைது செய்துள்ளனர்.




Sulli Deals, Bulli Bai ஆப் என்றால் என்ன.....

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் Sulli Deals என்ற செயலி முடக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றி ஏலம் விடும் Bulli Bai என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது

இதில் இஸ்லாமிய பெண்களின் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த செயலியில் இஸ்லாமிய பெண்களின் புகைப்படம் பதிவேற்றப்படும். அதில் ஒரு நபர் லாக்இன் செய்கிறார் என்றால், அவருக்கு ஒரு இஸ்லாமிய பெண்ணின் புகைப்படம் திரையில் தோன்றும். இவர்தான் உங்களின் சுல்லி.. இவரை ஏலம் விடுங்கள் என்று கேட்கும். அந்த பெண்ணை அதே ஆப்பில் இருக்கும் மற்ற யூசர்களுக்கு இவர் ஏலம் விட வேண்டும். இதுதான் இந்த செயலியின் நோக்கம். ஆனால் இது உண்மையான ஏலம் கிடையாது. 

உண்மையில் இதில் பெண்கள் விற்பனை செய்யப்படவில்லை என்றாலும், இஸ்லாமிய பெண்களை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த செயலி உருவாக்கப்பட்டது. இஸ்லாமிய பெண்களை அவமதிக்க வேண்டும், அவர்களை இழிபடுத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு அவர்களின் புகைப்படங்களை குறி வைத்து இந்த Sulli Deals செயலி உருவாக்கப்பட்டது. 

சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய பெண்கள் ஷேர் செய்யும் புகைப்படங்களை  எடுத்து  அந்த செயலியில் பதிவேற்றி, ஒவ்வொரு பெண்னுக்கும் ஒவ்வொரு மதிப்பு என்று கூறி ஏலம் விடுவார்கள். 

முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை அவர்களின் அனுமதியில்லாமல் பதிவிட்டு அவர்களை ஏலம் விடும் ஆப்ஸ் குறித்து சிவசேனா எம்.பி.பிரியங்கா சதுர்வேதி மும்பை போலீஸில் புகார் செய்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லி மற்றும் மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் பெங்களூருவில் இந்த விவகாரம் தொடர்பாக 21 வயது இஞ்சினியரிங் மாணவரை கைது செய்துள்ளனர்.

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback